ஸ்ரீராமானுஜர் வாழ்கை வரலாறு சித்திர வடிவில்

ஸ்ரீமன் நாராயணனின் அணுக்கத் தொண்டராகவும், படுக்கையாகவும் இருப்பவர் ஸ்ரீஆதிசேஷன். இவர் ராமாவதாரத்தில் ஸ்ரீராமரின் தம்பி லட்சுமணராகவும், கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் அவதரித்தவர். கலியுகத்தில் சகலரும் சரணாகதி மூலமாக பகவானை அடையச் செய்வதற்காக, ஶ்ரீராமாநுஜராக அவதரித்தார். அவதார புருஷராகப் பிறந்த ஸ்ரீராமாநுஜர் பெருமாளுக்கு உரிய கைங்கர்யங்களை மட்டும் செய்யாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பழைமைவாதம் மண்டிக்கிடந்த அந்தக் காலத்திலேயே புரட்சிகரமான சீர்திருத்தங்களை மக்களிடையே ஏற்படுத்தியவர்

நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவிகள், ஆழ்வார் கனவில் அருளிய நியமனப்படி தாமிரபரணி ஆற்று தீர்த்தத்தைக் கடைய, அதிலிருந்து காஷாயம் தரித்த ஸந்யாசியின் விக்ரகம் வெளிப்பட்டது. இதன் பொருளை ஆழ்வாரிடம் வினவ, “இவர் பின்னாளில் அவதரித்து கலியின் கோலாஹலத்தை ஒழித்து உலகை உய்விக்கப் போகிறார்” என அருளிச்செய்தார்.
காலப்போக்கில் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் மறைய, அந்தச் சமயத்தில் ஸ்ரீமந்நாதமுநிகள் அவதரித்தார். அவர் “கண்ணிநுண்சிறுத்தாம்பு” பிரபந்தத்தை பன்னிரண்டாயிரம் முறை அநுஸந்தித்ததனால், ஆழ்வார் ப்ரஸந்நராகி நாலாயிர திவ்யப் பிரபந்தங்களையும், ரஹஸ்யத்ரய உபதேசத்தையும் அவருக்கு அருளினார். மேலும், உலகை வழிநடத்தவிருக்கும் பவிஷ்யதாசார்யரை நாதமுநிகளுக்குத் தந்தருளினார்.
நாதமுநிகள் அந்த ஆசார்யரை மிகுந்த பக்தியுடன் தினந்தோறும் பூஜித்து வந்தார்.

ஸ்ரீபெரும்பூதூரில் ஆசூரி கேசவருக்கும் காந்திமதி தேவிக்கும் ஒரு அழகான குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் இராமாநுஜர். அவர் சித்திரை மாதம் வியாழக்கிழமை (கி.பி. 4-4-1017) சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை நட்சத்திர நாளில் வேதாந்தங்களை ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ ராமாநுஜர் அவதாரம் செய்தார்.
ராமானுஜர் அவதாரத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- ஆதிசேஷன் அவதாரம்:ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சமாகவும், விஷ்ணுவின் பஞ்சாயுதங்களில் ஒன்றாகவும் (தரிசனங்கள்) போற்றப்படுகிறார். திரேதாயுகத்தில் லட்சுமணனாகவும், துவாபரயுகத்தில் பலராமராகவும் அவதரித்த ஆதிசேஷன், கலியுகத்தில் ராமானுஜராகப் பிறந்தார் என்பது வைணவ நம்பிக்கை.
- அவதார நோக்கம்:சமூக சமத்துவம், பக்தி மார்க்கம், விசிஷ்டாத்வைதக் கொள்கைகளைப் பரப்புதல், மற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களை நிலைநிறுத்துதல் ஆகியவை இவரது முக்கிய அவதார நோக்கமாக இருந்தது.

ராமானுஜர் அவதரித்ததும் பூமாதேவி மகிழ்ந்தாள்.
ஏழை எளிய மக்களிடமும், சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டவர்களிடமும் கருணையும் அன்பும் கொண்டவர். `மக்களுக்காகவே கோயில்’ என்று கூறி ஆகமக் கோட்பாடுகளை எளிமைப்படுத்தியவர். எல்லோரும் ஆலயத்துக்குச் சென்று வழிபட வழிவகுத்தவர். `ஆண்டவனின் முன்பு அனைவரும் சமம்’ என்று ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொண்டிருந்தவர்.
ஆழ்வார்களுக்கு அடுத்து வைணவத்தில் உயர்ந்தநிலையை அடைந்தவர் ஸ்ரீராமாநுஜர். தமிழ் வேதம் செய்த நம்மாழ்வாரைப்போலவே இவரையும் உலகம் கொண்டாடுகிறது. பெருமாளிடமிருந்தே `சகல லோகங்களுக்கும் உடையவர்’ என்ற பட்டம் பெற்றவர். தன்னைப் பற்றி எண்ணாமல் மக்களைப் பற்றியே சிந்தித்த மகாஞானி.
ஆலயங்களில் அப்போதிருந்த பல கடினமான வழிபாட்டு நியதிகளை மாற்றி, எளிய வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் மாற்றியமைத்தவர்.

அழகான குழந்தை பிறந்தத செய்தியை கேட்ட காந்திமதி தேவியின் அண்ணன் திருமலை நம்பி திருமலையிலிருந்து ஸ்ரீ பெரும்பூதூருக்கு வந்தார். குழந்தையைப் பார்த்ததும், அதன் முகத்தில் இருந்த தெய்வீக ஒளியைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்.
அவர் அந்தக் குழந்தைக்கு “இளையாழ்வான்” என்று பெயர் வைத்தார்