ஸ்ரீராமானுஜர் வாழ்கை வரலாறு சித்திர வடிவில்

யாதவப்பிரகாசரின் உத்தி எதுவும் எடுபடாமல் போன வேளையில், என்ன செய்தால் நீ வெளியேறுவாய்? எனக் கேட்டார் பிரகாசர். அப்படி வாரும் வழிக்கு என்ற அந்தப் பேய், பிரகாசரே! உமது மாணவர் ராமானுஜர் மீது நான் பக்தி கொண்டவன். அவரது உடலில் ஞானதேவியே வசிக்கிறாள். அவரது அகன்ற கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பரந்த நெற்றியுள்ள அவர், அன்று பூத்த புதுமலர் போல் காட்சி தருவார். அவர் என் முன் வந்தாலே நான் போய்விடுவேன், என்றது. உடனடியாக ராமானுஜர் அழைத்து வரப்பட்டார். அரசிளங்குமரியின் முன் அமர்ந்த அவர், பிரம்மராட்சஸே! இப்பெண்ணை விட்டு விலகிப்போ, என்றார். ராமானுஜரைக் கண்டு அகமகிழ்ந்த அந்த ராட்சஷன், ஐயனே! நான் இப்போதே விலகுகிறேன்.
ஆனால், தங்கள் திருவடியை என் மீது வைத்தருள வேண்டும்,என்றது. ராமானுஜர் அதன் ஆசையை நிறைவேற்றினார். ராஜகுமாரியின் தலையில் தன் திருப்பாதங்களை வைக்கவும், உங்கள் அடிமையான நான் இப்போதே விலகுகிறேன், என்றான் ராட்சஷன். நீ விலகியதற்கு என்ன சாட்சி? எனக் கேட்டார் ராமானுஜர். ஐயா! அதோ, அரண்மனைக்கு வெளியே நிற்கும் அரசமரத்தில் அமர்ந்து அதன் உச்சியிலுள்ள கிளையை ஒடித்து போடுவேன், என்றான் ராட்சஷன். அதன்படியே சற்று நேரத்தில் அரசமரக்கிளை முறிந்து விழுந்தது. அம்மட்டிலேயே இந்த இளம்பெண்ணின் முகமே பிரகாசமானது.
அவள் பழையநிலையை அடைந்து, தன்னைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்துள்ளது எதற்காக என மலங்க மலங்க விழித்தாள். பின்னர், தனக்கு ஏற்பட்டிருந்த இன்னல் பற்றி கேள்வியுற்று, ராமானுஜரை நன்றிப் பெருக்குடனும், மற்றவர்களை நாணத்துடனும் பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். காஞ்சிமன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமானுஜரின் பாதத்தில் வயது வித்தியாசம் பாராமல் விழுந்து நன்றி கூறினான். இந்த தகவல் நாடெங்கும் பரவவே ராமானுஜருக்கு புகழ் பெருகியது

படிக்கும் காலத்திலேயே, இறைவனைப் பற்றி தவறான பொருள் சொன்னால், இராமாநுஜர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
அவர் பயமின்றி, அது சரியல்ல என்று சொல்லுவார்.
ஒரு நாள், குருகுலத்தில் இராமாநுஜர், தனது ஆசிரியர் யாதவருக்கு எண்ணெய் தேய்த்து சேவை செய்து கொண்டிருந்தார்.
அப்போது சில மாணவர்கள், சாந்தோக்ய உபநிஷத் என்ற நூலில் உள்ள ஒரு வாக்கியத்தின் பொருளைக் கேட்டார்கள்.
அந்த வாக்கியம்:
“கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி”
ஆசிரியர் யாதவர், அந்த வாக்கியத்திற்கு சங்கரர் சொன்ன பொருளை விளக்கியார்.
அதை கேட்டதும், இராமாநுஜரின் மனம் மிகவும் வருந்தியது.
அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அது ஆசிரியரின் துடையில் விழுந்ததால், அவருக்கு சுட்டது போல உணர்ந்தது.
இதைக் கண்டு யாதவர் ஆச்சரியப்பட்டு,
“ஏன் இப்படி நடந்தது?” என்று கேட்டார்.
அதற்கு இராமாநுஜர்,
“கப்யாஸம்” என்பதை கபி.ஆஸம் (குரங்கு-புட்டம்) எனப் பிரிப்பது பொருத்தமன்று; கம்-பிபதி- இதி-ஆஸ:” எனப் பிரித்து, “சூரிய மண்டலத்துள் உறையும் இறைவனின் கண், அக்கதிரவனால் அலர்த்தப் பெறும் நீரார் கமலம் போல்வன” என்பதே இவ்வாக்கியத்துக்குப் பொருந்திய பொருளாகும் என்றார் இராமாநுஜர்.
இந்த விளக்கம் யாதவருக்கு பிடிக்கவில்லை.
அவர் கோபமாக,
“நான் சொல்வதையே கேட்க வேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து போய்விடு” என்று கூறினார்.
அப்படிச் சொன்னாலும், இராமாநுஜர் தனது ஆசிரியரை விட்டு போகவில்லை.

இளையாழ்வான் அங்கே இருப்பதே யாதவருக்கு பிடிக்கவில்லை.
அவரைப் பார்த்தாலே எரிச்சல் ஏற்பட்டது.
தான் சொல்வதையே சரி என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காக,
“இராமாநுஜரை நீக்கிவிட்டால்தான் என் கருத்துகள் நிலைக்கும்”
என்று யாதவர் தவறாக நினைத்தார்.
அதனால், அவர் ஒரு கெட்ட திட்டம் போட்டார்.
“காசி யாத்திரை போகலாம்” என்று சொல்லி,
புனிதமான கங்கை நதியில் இராமாநுஜரை தள்ளி கொல்ல வேண்டும்
என்று யாதவர் ரகசியமாக திட்டமிட்டார்.
வெளியில் மட்டும் இராமாநுஜரிடம் நல்லவர் போல நடித்து,
காசி யாத்திரைக்கு அழைத்தார்.
அப்போது இராமாநுஜரின் தந்தை இல்லை.
அதனால் அவர் தாயிடம் அனுமதி பெற்று,
பல மாணவர்களுடன் யாதவருடன் யாத்திரைக்கு சென்றார்.
இராமாநுஜரின் தம்பி கோவிந்தனும் உடன் சென்றான்.
பயணத்தின் போது, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் பேசிக் கொண்டதை கேட்டு,
குருவின் கெட்ட எண்ணம் கோவிந்தனுக்கு புரிந்துவிட்டது.
தன் அண்ணனுக்கு ஆபத்து வரப் போகிறது என்று நினைத்து,
கோவிந்தன் மிகவும் கலங்கினான்.
“எப்படியாவது அண்ணன் தப்ப வேண்டும்”
என்று எண்ணி, அதற்கான வழியை தேடத் தொடங்கினான்.
எழுநூறு மைல் பயணமானபோது வழியில் ஒரு நாள், விந்திய மலை அருகே உள்ள காட்டில், அதிகாலையில் இராமாநுஜர் எழுந்தார்.
காலைக்கடன்களை முடிக்க, அருகில் இருந்த ஒரு சிறிய குளத்துக்குத் தனியாகச் சென்றார்.
அந்த நேரத்தை கோவிந்தன் பயன்படுத்திக் கொண்டான்.
அவன் இராமாநுஜரிடம் வந்து,
“அண்ணா, குரு உங்களைப் பற்றி கெட்ட திட்டம் போட்டிருக்கிறார்.
இப்போதே தப்பிச்சு போங்க”
என்று உண்மையைச் சொன்னான்.
உடனே இராமாநுஜர்,
அந்த காட்டுப் பகுதியில் கோவிந்தனைப் பிரிந்து,
தனியாக வேறு வழியில் நடந்து சென்று மறைந்தார்.

சில நேரம் கழித்து,
குருவும் மற்ற மாணவர்களும் இராமாநுஜரை காணாமல் பதறினர்.
எங்கும் தேடினார்கள்; கிடைக்கவில்லை.
கோவிந்தன் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
அப்போது யாதவப் பிரகாசர், “அய்யோ பாவம்!ஏதோ காட்டு விலங்கு இராமாநுஜரை கொன்றிருக்கும்.இதில் நாம் என்ன செய்ய முடியும்?
விதி அப்படித்தான்” என்று கோவிந்தனுக்கு ஆறுதல் சொன்னார்.
உள்ளுக்குள் அவர், “எப்படியாவது இராமாநுஜர் போய்விட்டார்.
என் எண்ணம் நிறைவேறியது”என்று நினைத்து திருப்தி அடைந்தார்.
பிறகு, “கங்கையில் மூழ்கி இறந்தாலும் சரி, காட்டில் விலங்கால் இறந்தாலும் சரி, என் நோக்கம் நடந்தால் போதும்” என்று நினைத்துக் கொண்டு, தன் காசி யாத்திரையை தொடர்ந்து சென்றார்.
அடர்ந்த விந்தியக் காட்டில், தனியாகப் பிரிந்திருந்த இராமாநுஜருக்கு வழி தெரியவில்லை.
அந்த நேரத்தில், கையில் வில் வைத்த ஒரு வேடன்,
அவனுடைய மனைவியுடன் அந்த வழியாக வந்தான்.
அவன் அன்புடன், “இந்தக் காடு ஆபத்தானது. இங்கே கொடிய விலங்குகளும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். நீ யார்? உன் ஊர் எது? எங்கே போகிறாய்?”என்று கேட்டான்.
அதற்கு இராமாநுஜர், “நான் காஞ்சீபுரம் போக வேண்டும்.வழி தவறி வந்துவிட்டேன்”என்று சொன்னார். பிறகு,“நீங்கள் யார்? எங்கே போகிறீர்கள்?” என்று வேட தம்பதியரை கேட்டார்.
அதற்கு அந்த வேடன், “நாங்கள் வடதேசத்தவர்.சத்தியவிரத க்ஷேத்திரம் போகிறோம்.எங்களுடன் வா, நாங்கள் வழி காட்டுகிறோம்” என்று சொன்னான்.
அன்று இரவு, இராமாநுஜர் அவர்களுடன் தங்கி, காய், கனிகளை உண்டு ஓய்வு எடுத்தார். மறுநாள் காலை,
அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பயணம் தொடங்கினார்.

நடுவழியில் இருட்டாகிவிட்டது.
வேட தம்பதியர், இராமாநுஜருக்காக ஒரு சிறிய இடத்தை அமைத்துக் கொடுத்து,அவருக்கு அருகிலேயே தாங்களும் உறங்கினார்கள்.
இரவு நேரத்தில், வேடன் மனைவிக்கு தண்ணீர் தாகமாக இருந்தது.
அவள் கணவனை எழுப்பி,“நீர் வேண்டும்” என்று கேட்டாள்.
அதற்கு வேடன்,“அருகில் ஒரு கிணறு இருக்கிறது. இராமாநுஜர் எழுந்தார்.வேடன் சொன்ன அந்தக் கிணற்றைத் தேடி சென்று நீர் எடுத்தார்.ஆனால் திரும்பி வந்தபோது,வேட தம்பதியரை எங்கும் காணவில்லை.அவர்கள் நடந்த சுவடும் கூட இல்லை.
நன்றாக வெளிச்சம் வந்த பிறகு,தாம் இருப்பது காஞ்சீபுரத்தின் ஒரு பகுதி என்பதைக் கண்டு,இளையாழ்வார் ஆச்சரியப்பட்டார்.
இது இறைவனின் அருளால் நடந்தது என்று அவர் உணர்ந்தார்.
வழி காட்டி உதவிய அந்த வேட தம்பதியரை நினைத்தபடியே,
இராமாநுஜர் தன் இல்லத்திற்குத் திரும்பினார்.
காசி யாத்திரைக்கு சென்ற இராமாநுஜர், கோவிந்தன் உதவியால்தான் உயிர் தப்பினார் என்பதை கேட்டதும், காந்திமதி மிகவும் மகிழ்ந்தார்.
அதிலிருந்து இராமாநுஜர் தினமும் குடம் நிறையத் தீர்த்தம் எடுத்துச் சென்று, வரதராஜர் கோவில் திருமஞ்சனத்துக்குக் கொடுத்து வந்தார்.