Description

காஞ்சிபுரம் அஷ்டபுயக்கரம் (அஷ்டபுஜம்) ஆதிகேசவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசம் ஆகும். இந்தத் தலத்தின் சிறப்பு – பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் (அஷ்டபுயகரம்) அருள்பாலிக்கிறார். அந்த கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு, சங்கு, வில், கேடயம், மழு போன்ற அஷ்ட ஆயுதங்களை ஏந்தி காட்சி அளிக்கிறார்.

இங்கு அலர்மேல்மங்கை தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்க, தாயாரைப் பற்றியும் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சக்ராக்ருதி விமானத்தின் கீழ், பெருமாள் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள் இத்தலத்தை பாடியுள்ளனர்.

இது கஜேந்திர மோக்ஷம் நிகழ்ந்த புனித ஸ்தலம். குளத்தில் முதலையால் பிடிக்கபட்ட யானை (முனிவரின் பிறவி) “ஆதிமூலமே” என்று அழைத்த போது, பெருமாள் சக்ராயுதத்தால் அதைப் வீழ்த்தி ரட்சித்தார்.

சிறப்பு அம்சங்கள்:

  • 108 திவ்ய தேசங்களில் ஒரே அஷ்டபுயக்கரம் தலம்

  • வாசலும் சொர்க்கவாசலும் வடக்கு நோக்கி இருக்கின்றன

  • நிலம், சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வான தலம்

  • லட்சுமி வராஹன் வழிபாட்டால் பூமி தொடர்பான பிரச்சினைகள் தீரும்

  • 9 முறை சுற்றி வணங்கினால் துன்பங்கள் தீரும்

வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, நவராத்திரி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. தாயார் சன்னதியில் தொட்டில் கட்டினால் பிள்ளைப் பேரும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Ashtabhujakaram Temple (also known as Ashtabujam) in Kanchipuram is the 44th Divya Desam, glorified in the Divya Prabandham hymns of Alwars. This sacred temple is unique among the 108 Divya Desams, as Lord Adikesava Perumal appears with eight divine arms (Ashtabhuja), each holding celestial weapons – Chakra, Sword, Flower, Arrow, Shankh, Bow, Shield, and Gada.

Goddess Alamelumangai Thayar resides here in a separate sanctum, and this is one of the rare temples where the Thayar has been individually praised in Alwar hymns. The main sanctum (garbhagriha) faces west, beneath the Chakrākṛti Vimanam. Saints like Thirumangai Alwar, Poigai Alwar, Swami Desikan, and Manavala Mamunigal have all sung praises of this holy site.

This Divya Desam is also closely linked to the legend of Gajendra Moksha, where Lord Vishnu saved the elephant (a sage reborn) from a crocodile, earning this place the name Gajendra Varadan Sthalam. The holy tank is known as Gajendra Pushkarini.

Special Features:

  • Only Divya Desam where Lord appears with eight arms

  • North-facing entrance and Sorga Vasal (Gateway to Heaven)

  • Powerful remedies for land/property disputes, and family problems

  • Worshipping Lakshmi Varaha can resolve land-related issues

  • Circumambulating the temple 9 times removes all sorrows

Festivals like Vaikunta Ekadasi, Sri Rama Navami, and Navaratri are celebrated with grandeur.

Devotees believe that tying a cradle in Thayar’s shrine blesses couples with children. This temple is a spiritual refuge for those facing obstacles in life, property, or family harmony.

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “44-Ashtabujam Kanchipuram”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery